கடற்கரையில் 3 அடி உயர சிலை கரை ஒதுங்கியது

கன்னியாகுமரியில்

Update: 2024-11-20 05:07 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள சங்குத்துறை கடற்கரையில் நேற்று மதியம் 12. 30 மணியளவில் ராட்சத அலை அடித்தது. அப்போது கடலில் இருந்து 3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி கல் சிலை கரை ஒதுங்கியது. கடற்கரையில் நின்றவர்கள் இதை பார்த்ததும் மதுசூதனபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி லெட்சுமி-க்கு தகவல் தெரிவித்தனர்.        அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சாமி சிலையை மீட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் கொண்டு பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்த சாமி சிலை எப்படி கடலில் வந்தது?  ஏதாவது கோயிலில் பழைய சிலையை மாற்றும் போது அந்த சிலையை கடலில் கொண்டு வீசினார்களா? அல்லது ஏதாவது கோயிலில் உள்ள சிலையை யாராவது மர்மநபர் தூக்கி கொண்டு கடலில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News