கரூர்- ராஜீவ் காந்தியின் முகமாக இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்- கீர்த்தன் பெரியசாமி விளக்கம்.

கரூர்- ராஜீவ் காந்தியின் முகமாக இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்- கீர்த்தன் பெரியசாமி விளக்கம்.

Update: 2024-11-21 12:22 GMT
கரூர்- ராஜீவ் காந்தியின் முகமாக இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்- கீர்த்தன் பெரியசாமி விளக்கம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் விடுதியின் கூட்டரங்கில் கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி தலைமையில் இளைஞர்களின் எழுச்சி பயணம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் கலந்து கொண்டார். மேலும் கரூர் வடக்கு நகர தலைவரும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டீபன் பாபு, கரூர் மாவட்ட தொழில் நுட்ப அணி பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது மத்திய நகர தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கரூர் சட்ட மன்ற தலைவர் சக்கரவர்த்தி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தலைவர் சதீஷ் குளித்தலை சட்டமன்ற தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், அன்னை இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்திரா பிரியதர்ஷினி விருது கரூர் மாமன்ற 12-வது வார்டு உறுப்பினர் மஞ்சுளா பெரியசாமி உள்ளிட்டோருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சி நிறைவில் சிறப்புரையாற்றிய கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கீர்த்தன் பெரியசாமி பேசும்போது, என்று பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்ததோ அன்றிலிருந்து இன்று வரை அரசியல் சாதிய ரீதியான மோதல்களை எல்லா இடத்திலும் நடத்தி இருக்கிறது என்றும், கல்லூரி செல்லும் மாணவர்களிடையே ஜாதிய வெறியை தூண்டி அதில் அரசியல் செய்கிறது பிஜேபி அரசு என்றும், இரண்டு சமூகங்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்றும், யார் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்று பிஜேபி அரசு தீர்மானிக்கிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதையெல்லாம் நாம் சிந்தித்து பாசிசத்தை வேரறுக்க வேண்டுமென்றால் ஜனநாயகம் மலர வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் டெல்லியில் பேசும் ராஜீவ் காந்தியின் கருத்துக்களை எடுத்துச் செல்லும் முகமாக கரூர் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என கூறினார்.

Similar News