முன்னூத்துபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை.
முன்னூத்துபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை.
முன்னூத்துபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, ஒரத்தை, முன்னூத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி மணி வயது 39. இவர் கடந்த 6- வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளை சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த மணி நவம்பர் 20ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் இவர்கள் தோட்டத்தில் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த மோகன்ராஜ், தனது மனைவியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த மணி சிகிச்சை பலனின்றி நவம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.