கோவில் நிலம் ஆக்கிரமிப்பு, வீட்டிற்கு சீல் வைத்த அறநிலையத்துறை அலுவலர்கள்

குமாரபாளையத்தில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக  வீட்டினை காலி செய்ய வைத்து, அறநிலையத்துறை அலுவலர்கள் வீட்டிற்கு சீல் வைத்தனர்.

Update: 2024-11-26 14:59 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஒன்றில் அர்ச்சராக பணியாற்றி வந்த சரவணகுமார் என்பவர், கோவில் நிலத்தில் அனுமதி இல்லாமல் வீடு கட்டி,  பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து, நீதி மன்ற உத்திரவின்படி நேற்று வீட்டை காலி செய்ய வைத்து, அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். இதில் உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆலய நிலங்கள் தனி வட்டாச்சியர் சுந்தரவல்லி, துணை ஆட்சியர் குப்புசாமி, வி..ஏ.ஒ. அரசு, செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News