அவனியாபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
மதுரை அவனியாபுரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மதுரை அருகே அவனியாபுரத்தில் திமுக சார்பில் இன்று (டிச.19)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அவனியாபுரம் பகுதி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கருப்பசாமி, குட்டி ராஜரத்தினம், வட்ட செயலாளர்கள் பாலா , நேதாஜி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் அவனியாபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அமித்ஷா வை கண்டித்து கண்டண முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.