குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகள் விஜயதர்ஷினி (16). இவர் மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று பிற்பகல் அருகில் உள்ள சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாகோடு பகுதியை சேர்ந்த டிம்பர் டிப்போ டிரைவர் தினேஷ் லால் அந்த பகுதியில் டெம்போ நிறுத்திவிட்டு பின்பகுதியை மேல் நோக்கி தூக்கி உயர்த்தி விட்டு சென்றுள்ளார். இந்த டெம்போ அருகே சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் டெம்போவின் பின்பகுதி தானாக கீழே விழுந்தது. இதில் விஜய தர்ஷினி சிக்கி சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியானார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.