புதிய நியாய விலை கடை திறப்பு விழா
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்பு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடலூர் மாவட்டம், குமாராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்கட்டளை ஊராட்சி, கொத்தவாசல் நியாய விலைக்கடையை இன்று (28.12.2024) திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் சரண்யா., சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, உட்பட பலர் உள்ளனர்.