குளித்தலையில் தைப்பூசம் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கரூர் மாவட்ட எஸ்.பி

குளித்தலை டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்பு;

Update: 2026-01-31 16:11 GMT
கரூர் மாவட்டம் குளித்தலையில் நாளை தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் குளித்தலை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மற்றும் சாமிகளை காண வருகை புரிய உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து கரூர் எஸ்.பி ஜோஸ் தங்கைய்யா நேற்று மாலை குளித்தலை கடம்பர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அங்கு சாமிகள் சந்திப்பு நடைபெறும் இடத்திலிருந்து தீர்த்தவாரி நடைபெறும் இடம் வரை நடந்து சென்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குவது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன், கோயில் செயல் அலுவலர் தீபா, வருவாய்த்துறை மண்டல துணை வட்டாட்சியர் நீதிராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News