கொமதேக சார்பில் சேந்தமங்கலத்தில் தைப்பூச பால்குடம் விழா!

சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அருள்மிகு ஸ்ரீ தத்தகிரி முருகன் கோயிலில் மாபெரும் பால் அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற உள்ளது.;

Update: 2026-01-31 14:42 GMT
கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி நாமக்கல் தெற்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒருங்கிணைந்த ஒன்றியத்தின் சார்பில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பால்குடம் அபிஷேக விழா வருகிற 01.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் சேந்தமங்கலத்தில் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு, சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அருள்மிகு ஸ்ரீ தத்தகிரி முருகன் கோயிலில் மாபெரும் பால் அபிஷேக ஆராதனை சிறப்பாக நடைபெற உள்ளது.
Advertisement
இந்நிகழ்வில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில தலைவர் கொங்குமாமணி தேவராசன், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்.எல்.ஏ., நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளருமான மாதேஸ்வரன் எம்.பி., துணை பொதுச் செயலாளர் சின்ராஜ் முன்னாள் எம்.பி. உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு முருகன் அருளைப் பெற வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Similar News