ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது...
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது...;
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பூக்கடை வீதியில் உள்ள கொங்கு நாட்டு வெள்ளாளர் மண்டபத்தில் "ஜாகை'யில் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் க. தாளமுத்து தலைமையில் தமிழ் தாய் வாழ்த்துக்களுடன் துவங்கியது. இதில் சங்கத்தைச் சேர்ந்த மாரப்பன் பொருளாளர் குழந்தை வேலு, தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க இணை செயலாளர் ஏ. ராஜு அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக "ஜெயம் கண் மருத்துவமனையின்"அலுவலக கண்காணிப்பாளர் (A.O) "சுகன்யா, டாக்டர் நவமோகன கிருஷ்ணன்" ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற அலுவலர் அவர்களுக்கு "கண்புரை" கண்" சம்பந்தப்பட்ட சிகிச்சை பற்றி எடுத்து பேசினார். அதேபோல் அரசு வழங்கும் காப்பீட்டு திட்டம் மூலம் கண்புரை' அறுவை சிகிச்சை "நவீன புதிய லேசர்" முறையில் செய்து 5" நிமிடத்தில் செய்து கொள்ளலாம்' என விளக்கமாக பேசினார். தொடர்ந்து தலைவர் க. தாளமுத்து பேசுகையில் "மார்ச் 1.3.2026, அன்று "மாவட்ட செயற்குழு கூட்டம்" நாமக்கல்லில் நடைபெற உள்ளது ஆகவே நமது உறுப்பினர்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசு வழங்கிய பழைய ஓய்வுத் திட்டத்தை வழங்கியதற்கு "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்" மற்றும் சுகாதார செயலாளர்"நிதி அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இக்கூட்டத்தில் மகளிர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ருக்குமணி, ராணி, பாலகிருஷ்ணன், தமுஸ்தின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கச் செயலாளர் சுப்பிரமணியம் நன்றியுரையாற்றினார்.