நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். கரூரில் மஞ்சப்பை கசாப்பு கடை திறப்பு விழாவில் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் பேச்சு.

நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். கரூரில் மஞ்சப்பை கசாப்பு கடை திறப்பு விழாவில் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் பேச்சு.;

Update: 2026-01-31 15:23 GMT
நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். கரூரில் மஞ்சப்பை கசாப்பு கடை திறப்பு விழாவில் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் பேச்சு. தமிழகத்தில் அசைவ பிரியர்களின் முதல் தேர்வாக மட்டன் உள்ளது. இரண்டாவதாக சிக்கன் மீன் மற்றும் நாட்டுக்கோழியாக உள்ளது. கரூரில் அண்மைக்காலமாக பிரியாணி கடைகள் திறப்பு வரிசை கட்டி உள்ளது. இந்த நிலையில் அசைவ பிரிய பிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மஞ்சப்பை கசாப்பு கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரியாணி பிரியாணி கடை நடத்தி வரும் ஆர்ஆர் பிரியாணி நிறுவனத் தலைவர் தமிழ்ச்செல்வன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், யமஹா சுரேஷ் கடையின் ஊழியர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடை திறப்பு விழா நிறைவு பெற்றதும் குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றிய ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது, கரூர் அசைவப் பிரியர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே மஞ்சப்பை கசாப்பு கடை திறக்கப்பட்டுள்ளது. சத்துள்ள தீவனங்களை கொடுத்து வளர்க்கப்பட்ட ஆடுகளின் இறைச்சி இங்கு விற்பனை செய்யப்படுகிறது. சமைப்பதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் இறைச்சியை வாங்கிச் செல்லுங்கள். சமைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் எங்கள் பிரியாணி கடைக்கு வந்து பிரியாணி வாங்கி சாப்பிடுங்கள் என தெரிவித்த அவர், வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். உழைத்த பிறகு நேரத்தை பார்க்க வேண்டும். நேரத்தைப் பார்த்து உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெற இயலாது என தெரிவித்தார்.

Similar News