ஜல்லிக்கட்டினை துவக்கி வைத்த மாநில தி.மு.க. அமைப்பு செயலாளர், எம் .பி., அமைச்சர்
குமாரபாளையம் ஜல்லிக்கட்டினை மாநில தி.மு.க. அமைப்பு செயலாளர், எம் .பி., அமைச்சர் ஆகியோர் துவக்கி வைத்தனர்;
குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில் ,தனியார் கல்லூரியின் பின்புறம் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று\நடைபெற்றது700-க்கும் மேற்பட்ட மாடுகள் 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். தி.மு.க. மாநில அமைப்பு செயலர் பாரதி, ஈரோடு எம்.பி. பிரகாஷ், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி, ஆகியோர் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர். முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் லெனின் உறுதிமொழி வாசிக்க, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சீறி வந்த காளைகளை, வீரர்கள் அடக்கி சாதனை படைத்தனர். வீரர்கள் கையில் சிக்காமல் மாடுகளும் சாதனை படைத்தன. இதனை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி.க்கள் கிருஷ்ணன், கவுதம், இன்ஸ்பெக்டர்கள் தேவி, தவமணி, தாசில்தார் பிரகாஷ், உள்ளிட்ட போலீசார், தீயணைப்பு துறை மற்றும் மருத்துவக் குழு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற ஐம்பத்தாறு இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது