தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் விடிய விடிய போராட்டம்

குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிப்பதால் பாதிக்கப்படுவதாக கூறி விடுதி மாணவ மாணவிகள் இரவு 7 மணி நேரம் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;

Update: 2026-01-31 13:30 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் சுமார் 15000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இதில் சுமார் 8,000 மாணவ மாணவிகள் கல்லூரியின் விடுதியிலேயே தங்கி பயின்று வருகின்றனர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கல்லூரி சார்பில் வழங்கிய குடிநீரில் மாசுத்தன்மை ஏற்பட்டதால் சுமார் 140 மாணவ மாணவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர் இதனை அடுத்து கல்லூரி பத்து நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகள் பராமரிக்கப்பட்டு சுத்திகரிப்பு இயந்திரங்களும் பராமரிக்கப்பட்டன இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் ஆய்வுக்குப் பின்னர் மீண்டும் கல்லூரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் தற்பொழுது விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவிகள் குளிப்பதற்கு வழங்கும் சூடான நீர் காலை 8 மணிக்கு நிறுத்தி விடுவதாகவும் அதனைத் தொடர்ந்து மின்சாரத்தையும் துண்டித்து விடுவதால் மாணவ மாணவிகள் குளிரில் குளிக்க முடியாமல் தவிக்கின்றனர் மேலும் சிறிது நேரம் தாமதாக வகுப்பு அறைக்கு சென்றால் அபராதம் கட்டணம் விதித்து விடுகிறது தான் ஆத்திரமடைந்த விடுதி மாணவ மாணவிகள் இன்று இரவு 9 மணிக்கு சுமார் 1500 மாணவ மாணவிகள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு இன்று கோசமிட்டபடியே போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி தலைவர் நடேசன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் மாணவிகள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது இது குறித்து தகவல் அளித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விமலா திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் ஆகியோர் அதிகாலை 4 மணியளவில் கல்லூரி வளாகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் மாணவிகளுக்கு நீர் தடை இன்றிகிடைக்கவும் அபராதம் விதிப்பதை கல்லூரி நிர்வாகம் கைவிட வலியுறுத்துவதாகவும் மேலும் குறைவாக வழங்கப்படும் உணவு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதி அளித்ததின் பேரில் மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் சுமார் 7 மணி நேரம் இரவு நேரத்தில் மாணவ மாணவிகள் போராடியதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது விடுதி மாணவ மாணவிகள் போராட்டத்தின் காரணமாக கல்லூரிக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

Similar News