குளித்தலையில் அரசு போக்குவரத்து கழகம் கரூர் மண்டல தொழிலாளர் சங்கம்

குளித்தலை கிளை சார்பில் ஆலோசனைக் கூட்டம்;

Update: 2026-01-31 13:45 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) கரூர் மண்டல தொழிலாளர் சங்கம் குளித்தலை கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் மணத்தட்டை தனியார் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. குளித்தலை கிளை தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். வேலை அறிக்கையை சங்க செயலாளர் செந்தில்குமார் மற்றும் வரவு செலவு அறிக்கையை சங்க பொருளாளர் சசிகுமார் நிர்வாகிகள் முன்னிலையில் வாசித்தனர். இக்கூட்டத்தில் விழா காலங்களில் தவிர மற்ற நாட்களில் கூடுதலான நேரங்களில் பேருந்து இயக்க ஊழியர்களிடம் கூறக்கூடாது, தற்காலிக தொழிலாளர்களுக்கு பணிகளை கொடுத்து நிரந்தர தொழிலாளர்களை புறம் தள்ள கூடாது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜேந்திரன், பொது செயலாளர் விஜயகுமார், முசிறி மகேஸ்வரன், துணை செயலாளர் கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News