கள்ளக்குறிச்சி: அகில பாரத ஐயப்ப சேவா சங்க கூட்டம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்க கூட்டம்;
கள்ளக்குறிச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திரு.T.அசோக்குமார் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைத் தலைவர்கள் திரு.A.K.மோகன், திரு.G.அரவிந்தன் ஆகியோர் முன்னிலையில் 10.30 மணியளவில் மாவட்ட இணை செயலாளர் திரு.A.ஜெகதீசன் அவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றினார்.மாவட்ட செயலாளர் திரு.T. K.முரளிதரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தொண்டர் படை தளபதி திரு.K.பிரபு, மாவட்ட இணை செயலாளர் திரு.G.ரங்கநாதன், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் திரு.D.மனோகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி, புதிய கிளைகள் உருவாக்குதல், மாநில நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருவது,ஆதிதிருவரங்கம் கோவிலில் அன்னதானம் அளித்தல், எதிர்வரும் சீசனில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அன்னதான முகாம் அமைப்பது மற்றும் ஓம் ஶ்ரீ ஐயப்பன் மாத இதழ் ஒவ்வொரு கிளைகளும் வாங்குவது போன்ற தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.முடிவில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கிளைகளுக்கும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாவட்ட பொருளாளர் திரு.D.G.சேகர் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. (10 ஊரில் புதிய கிளைகள் துவங்க படிவத்தை மாவட்ட தலைவர் வழங்கி வாழ்த்தினார்.