ஆரணி ஏ.சி.எஸ் கல்வி குழுமங்களிடையே விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.

ஆரணி ஏ.சி.எஸ் கல்வி குழுமங்களிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் ஏ.சி.எஸ் கல்விக்குழும நிர்வாக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார்.;

Update: 2026-01-31 07:21 GMT
ஆரணி ஏ.சி.எஸ் கல்வி குழுமங்களிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆரணி ஏ.சி.எஸ் கல்வி குழும கல்லூரிகளான டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி, டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்ல்லூரி, பாலாஜி கல்வியியல் கல்லூரி, எஸ்.பி.சி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை ஏ.சி.எஸ் கல்விக்குழும் நிர்வாக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் லலிதாலட்சுமி சண்முகம், பென்ஸ் கிட்ஸ் மற்றும் பென்ஸ் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் நிர்மலாஅருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு அனைவருக்கும் பரிசுகளை வழங்கினர். கல்லூரி செயலாளர் ஏ சி ரவி, பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின், இணை பதிவாளர்கள் பெருவழுதி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதன்மையர் புவனா, பிஸியோதெரபிதுறைத்தலைவர் சுதாகர், ஏ.சி.எஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.இளங்கோ, கலைக்கல்லூரி முதல்வர் கந்தசாமி, பாலாஜி கல்வியியல் கல்லூரிமுதல்வர் பிரபு, பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருளாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News