மாமண்டூரில் ஒரே இரவில் 8 வீடுகளில் புகுந்து சுமார் 12 சவரன் நகைகள் மற்றும் பணம் ரூ.1லட்சம் திருட்டு.
ஆரணி அடுத் மாமண்டூரில் வியாழக்கிழமை நள்ளிரவில் செங்குந்தர் தெருவில் 3 வீடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் நகை மற்றும் பணம் நகை திருடு போனது. மாமண்டூர் ஆனந்தன் வீட்டில் பீரோ உடைத்து திருடுபோனது.;
ஆரணி அடுத்த மாமண்டூரில் நள்ளிரவில் ஒரே இரவில் 8 வீடுகளில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற நபரை ஆரணி கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு ஆகிய தெருக்களில் உள்ள பூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதில் ஆனந்தன்(37) என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து இரண்டரை சவரன் நகையும், 110 கிராம் வெள்ளி பொருட்களும் திருடிச்சென்றுள்ளனர். மேலும் ராணிப்பேட்டை பெல் கம்பெனியில் பணிபுரியும் ராமசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 சவரன் நகையும், 93 கிராம் வெள்ளி பொருட்களும் திருடிச்சென்றுள்ளனர். சாந்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து 4 சவரன் நகையும், ரூ.40 ஆயிரமும், இதேபோல் வினோத் என்பவரின் வீட்டில் 3 சவரன் நகையும் என மொத்தம் 8 வீடுகளில் 13 சவரன் நகையும், சுமார் 500 கிராம் வெள்ளி பொருட்களும், ரூ.1லட்சம் திருடு போனது. ஆரணி கிராமிய போலீஸார் மேற்கண்ட நபர்களின் புகார்களை பதிவு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.