100 நாள் வேலை திட்டத்தில் திட்டத்தில் கொண்டு வந்த மாற்றத்தையும் கண்டித்து ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் கொண்டு வந்த பெயர் மாற்றம் மற்றும் திட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களை கண்டித்து ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.;

Update: 2026-01-31 02:25 GMT
ஆரணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் கொண்டு வந்த பெயர் மாற்றம் மற்றும் திட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களை கண்டித்து ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் கொண்டு வந்த பெயர் மாற்றம் மற்றும் திட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களை கண்டித்து ஆரணி தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டதலைவர் ஜெ.பொன்னையன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மாவட்ட செயலாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜே.ராஜாபாபு, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் வாசுதேவன், அசோக்குமார், பி.கே.ஜி.பாபு, சேத்துப்பட்டு ஜி.முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் நகர பொறுப்பாளர் எஸ்.டி.செல்வம், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் தாவுத்ஷெரிப், நகர நிர்வாகிகள் பிள்ளையார் சம்பந்தம், பிரபு மற்றும் வந்தவாசி, செய்யார், தெள்ளார், போளூர் பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதில் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் பானல், கடப்பாரையுடன் கலந்துகொண்டனர்.

Similar News