நாமக்கல் கிழக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி 78-வது நினைவு தின அஞ்சலி!

காந்தியடிகளின் புகழ் முழக்கங்கள் எழுப்பப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது.;

Update: 2026-01-30 16:40 GMT
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் உழவர் சந்தை அருகிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் டாக்டர் பி.வி. செந்தில் தலைமை வகித்தார். காந்தியடிகளின் புகழ் முழக்கங்கள் எழுப்பப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தீண்டாமைக்கு எதிரான உறுதிமொழி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது.சமத்துவம், சமூக நீதி மற்றும் சகோதரத்துவம் ஆகிய மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருப்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் வலியுறுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வீரப்பன்,சித்திக், நகர தலைவர் மோகன், துணைத் தலைவர் செல்வம், ஒன்றியத் தலைவர்கள் தங்கராசு,குப்புசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் தாஜ், சமூக ஊடகப் பிரிவு பிரதிநிதி நவீன், மகளிர் அணி பிரதிநிதி தனலட்சுமி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

Similar News