திருச்செங்கோடு நகராட்சியில் காந்தியடிகள் நினைவு தினத்தை ஒட்டி உருவச் சிலைக்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மாலை அணிவித்து மரியாதை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
திருச்செங்கோடு நகராட்சியில் காந்தியடிகள் நினைவு தினத்தை ஒட்டி அன்னாரது உருவச் சிலைக்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள்மாலை அணிவித்து மரியாதை தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு;
காந்தியடிகளின் 79 ஆவது நினைவு தினம் தியாகங்கள் தினமாகநாடு முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில்காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாககடைபிடிக்கப்பட்டது இதனை ஒட்டிநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.தியாகிகள் தினத்தை கொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்நிகழ்ச்சி நடைபெற்றது திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உறுதி மொழியை வாசிக்க நகராட்சி ஊழியர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இந்திய அரசியல் அமைப்பின் பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் ஆகிய நான் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன் என்று உறுதி மொழியை வாசிக்க மற்றவர்கள் வழிமொழிந்தனர் இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார் சண்முகவடிவு, திவ்யா வெங்கடேஸ்வரன்,ராதா சேகர், முருகேசன்,தாமரைச்செல்வி மணிகண்டன், W.T.ராஜா, அண்ணாமலை மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.