பூரண மதுவிலக்குபோதை பொருள் ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சேலத்தில் இருந்து காந்தி ஆசிரமம் வரைஐந்து பேர் பாதயாத்திரை
மகாத்மாகாந்தியின் 78 ஆம் ஆண்டு நினைவுதினத்தைமுன்னிட்டு, சேலத்தைசார்ந்த 94 வயது காந்தியவாதி டாக்டர் பிராங்ளின்காந்தி( எ)டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டுபெண்கள்உட்பட ஐந்துநபர்கள், பூரணமதுவிலக்கு பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் சேலத்தில் இருந்து காந்தி ஆசிரம வரை பாதயாத்திரைவந்தனர்;
மகாத்மாகாந்தியின் 78 ஆம் ஆண்டு நினைவுதினத்தைமுன்னிட்டு, சேலத்தைசார்ந்த 94 வயது காந்தியவாதி டாக்டர்பிராங்ளின்காந்தி( எ)டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் இரண்டுபெண்கள்உட்பட ஐந்துநபர்கள், பூரணமதுவிலக்குவேண்டியும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், இளைஞர்களின்வாழ்வை, சீரழிக்கும்போதை பொருட்களை முற்றிலும்,ஒழிக்கவேண்டியும், சேலத்திலிருந்து பாதயாத்திரையாக,திருச்செங்கோடுகாந்தி ஆசிரமம் வந்தடைந்தனர். அவர்களுக்கு வரவேற்று பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து காந்திநினைவு நாள் அனுஷ்டிக்கப் பட்டது. விழாவில் ஆசிரமடிரஸ்டி பொன்.கோவிந்தராசு, பாதயாத்திரை வந்தவர்களை பாராட்டி கதராடை அணிவித்துபாராட்டிபேசினார். விழாவில்ஆசிரமசெயலாளர் குமரவேல்,நிர்வாக அதிகாரிகிருஷ்ணமூர்த்தி,கோவை விவேகானந்த தியானமையத் தலைவர்டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும்ஆசிரம ஊழியர்கள்கலந்துகொண்டுசிறப்பித்தனர்.