கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த நாகுப்பம் கிராமத்தில் கோவில் உண்டியல் உடைத்த நபர்கள் கைது!
சின்னசேலம் அடுத்த நாகுப்பம் கிராமத்தில் நாகாத்தம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 1:00 மணி அளவில் பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 30; யாகவன், 18, குருமூர்த்தி, 19; ஆகியோர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த 2,800 ரூபாயை திருடி சென்றனர்.அதேபோல் அருகில் இருந்த ஜவுளி கடையின் பூட்டை உடைத்து 400 ரூபாய் பணத்தையும் திருடியுள்ளனர்.இது குறித்த புகாரில் வழக்கு பதிந்த சின்னசேலம் போலீசார் வெங்கடேசன், யாகவன், குருமூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.