கரூரில் தமிழ்நாடு சுரங்க சுற்றுச்சூழல் மற்றும் கனிம பாதுகாப்பு கவுன்சிலிங் 33வது மாநில அளவிலான இறுதி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

கரூரில் தமிழ்நாடு சுரங்க சுற்றுச்சூழல் மற்றும் கனிம பாதுகாப்பு கவுன்சிலிங் 33வது மாநில அளவிலான இறுதி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.;

Update: 2026-01-30 15:58 GMT
கரூரில் தமிழ்நாடு சுரங்க சுற்றுச்சூழல் மற்றும் கனிம பாதுகாப்பு கவுன்சிலிங் 33வது மாநில அளவிலான இறுதி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சுரங்க சுற்றுச்சூழல் மற்றும் கனிம பாதுகாப்பு கவுன்சிலிங் ஆண்டுதோறும் தமிழகத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தங்கம் நடத்துவது வழக்கம். இதன் அடிப்படையில் கரூரில் செயல்படும் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுரங்கம்- நிலையான வாழ்க்கை என்ற கருப்பொருளுடன் நடப்பாண்டுக்கான மாநில அளவிலான இறுதி நாள் கொண்டாட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாக்பூர் சுரங்க பணியகத்தின் பொது கட்டுப்பாட்டு அலுவலர் பங்கஜ் குல்சாரிஸ்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் பெங்களூரு இந்திய சுரங்க பணியகத்தின் தென் மண்டல கட்டுப்பாட்டாளர் சைலேந்திர குமார், இந்திய சுரங்க பணியகத்தின் சென்னை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் சேத்தி, செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் இணைத் தலைவர் கிருஷ்ணன், தலைமை இயக்குனர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கவுன்சிலின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு சுரங்கத் தொழில் நிபுணர்கள், சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட அரங்கத்தில் முன்பு சுரங்க தொழிலில் பயன்படுத்தக்கூடிய கனரக வாகனங்கள் இலகுரக இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் எந்திரங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய தொகுப்பை பார்வைக்கு வைத்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் இயற்கையாக கிடைக்கக்கூடிய கனிம வளங்களை ஒருங்கிணைத்து நாட்டு மக்களின் நீண்ட கால பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் இயற்கையை பாதிக்காத வண்ணம் சுரங்க தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Similar News