அரசு கலைகலைக் கல்லூரியில் காந்தி நினைவு தினம் அனுஷ்டிப்பு
குமாரபாளையம் அரசு கலைகலைக் கல்லூரியில்காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.;
குமாரபாளையம் அரசு கலைகலைக் கல்லூரியில்காந்தி நினைவு தினம் சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவு மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மாணவ, மாணவியர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.