மாகாளிப்பட்டியில் சாத்தால குல பங்காளிகள் சார்பில் கும்பாபிஷேக விழா
மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி தீர்த்த குடம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் கிராமம் மாகாளிப்பட்டியில் சாத்தால குலப்பங்காளிகள் சார்பில் சின்னம்மாள், கருப்பசாமி, பெரியசாமி, பெருமாள், மதுரை வீரன், நாகம்மாள் ஆகிய தெய்வங்கள் அடங்கிய கோவில் கும்பாபிஷேக விழா நாளை ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதை ஒட்டி அப்பகுதியினர் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் சென்றனர். அங்கு கோவில் முன்பு உள்ள யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இரண்டு கால பூஜைகள் நிறைவடைந்ததும் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாகாளிப்பட்டி, வெந்தப்பட்டி, பேரூர் பகுதி சாத்தான குல பங்காளிகள் செய்திருந்தனர்.