கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மார்க் கடை இடமற்றம் செய்ய மக்கள் நீதிப்பேரவை கோரிக்கை
உளுந்தூர்பேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை அகற்ற மக்கள் நீதி பேரவை கோரிக்கை;
உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிப்பு டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த கோரிக்கை எழுப்பியுள்ளது* மாவட்ட நிர்வாகமே! உங்கள் பார்வைக்கு இது தெரியவில்லையா? இடம்: உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் (மிக அருகில்). ஒரு ஊரின் இதயம் போன்றது பேருந்து நிலையம். ஆனால் உளுந்தூர்பேட்டையில் அந்த இதயம் "டாஸ்மாக்" போதையில் சிக்கித் தவிக்கிறது! உங்கள் மனசாட்சியிடம் கேட்கிறோம்: பள்ளிச் சீருடையுடன் பேருந்துக்காகக் காத்திருக்கும் சிறுமிகள், குடிமகன்களின் ஆபாசப் பேச்சுகளைக் கடந்துதான் செல்ல வேண்டுமா? கையில குழந்தையோடு பேருந்து ஏறும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பு எங்கே? பேருந்து நிலையத்திலேயே குடிமகன்கள் விழுந்து கிடப்பதுதான் ஒரு ஊரின் வளர்ச்சியா? உடனடி விளைவுகள்: பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்களிடம் அநாகரீகமாக நடப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. விபத்து அபாயம்: மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் உயிரிழப்புகள் ஏற்படக் காத்திருக்கிறதா அரசு? *சமூகச் சீர்கேடுபொதுவெளியிலேயே மது அருந்துவது உளுந்தூர்பேட்டையின் அமைதியைக் குலைக்கிறது. வருமானத்தை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்! மக்களின் நிம்மதியான பயணத்தை உறுதி செய்யுங்கள்!" அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நாங்கள் வைக்கும் கோரிக்கை — இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இந்த இடத்திலிருந்து அகற்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும்.