குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பிள்ளை தோப்பு பகுதி சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோஸ் (43). மீன்பிடி தொழிலாளி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த 34 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தப் பெண் ஆரோக்கிய ஜோசை காதலித்து கடந்த 2018 -ல் 2-ம் திருமணம் செய்தார். பின்னர் தனது மகளுடன் குமரி மாவட்டம் பிள்ளை தோப்பில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பெண் குழந்தை கடந்த 2022 ல் வயதுக்கு வந்தது. அதன் பின் சிறுமியிடம் ஆரோக்ய ஜோஸ் பாலியல் ரீதியாக அத்து மீறியதாக கூறப்படுகிறது. கணவரை தாய் கண்டித்தும், மீண்டும் சிறுயிடம் அத்துமீறி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ஆரோக்கிய ஜோஸ் மனைவி மற்றும் சிறுமியை மது அருந்த வற்புறுத்தியுள்ளார். அதற்கு உடன்படாத இருவரும் வீட்டை விட்டு வெளியே தப்பி வந்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆரோக்ய ஜோசை கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் போக்சா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.