வேலூர்: மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

வேலூர் அருகே மின்சாரம் தாக்கி ஐயப்ப பக்தர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-12-28 09:43 GMT
வேலூர் கணியம்பாடி அருகே மேல்வல்லம் பகுதியில் சகாதேவன் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி இன்று நடந்துள்ளது. பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த பத்மா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் உரிமையாளர் முகேஷ் குமார் மற்றும் தொழிலாளி சதீஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 அடி நீள இரும்பு தடுப்பு கம்பி தரைதளத்திலிருந்து மொட்டை மாடிக்கு ஏற்ற முயன்ற போது வீட்டின் அருகே சென்ற மின் கம்பியில், இரும்பு தடுப்பு கம்பி உரசியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே முகேஷ் குமார் மற்றும் சதீஷ்குமார் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேலூர் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரில் சதீஷ்குமார் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த நிலையில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News