அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.
மதுரை மேலூரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக்கழகத்தின் பொன்விழா, சீமான் (எ) மீனாட்சி சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மேலூர் வட்டத்தில் 2023-2024 கல்வி ஆண்டில் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மதுரை, மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக திருமண மண்டபத்தில் இன்று (டிச.28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக தலைவர் டாக்டர் பூபதி தலைமை தாங்கினார். சொத்து பாதுகாப்பு குழு தலைவர் பி.கே.எம். செல்லையா முன்னிலை வகித்தார், மாநில செயலாளர் சின்னாத்தேவர் வரவேற்புரையாற்றினார். சென்னை பசும்பொன் அறக்கட்டளை தலைவர் ராஜாக்கூர் எம். மலைச்சாமி சிறப்புரை ஆற்றினார். கள்ளர் பண்பாட்டு மைய தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ.கலைமணி அம்பலம் சீமான் (எ) மீனாட்சி சுந்தரம் அவர்கள் நூற்றாண்டு நிறைவு பேருரையை ஆற்றினார். இதனை தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடம் பெற்ற 14 மாணவர்களும் மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக, முக்குலத்தோர் கல்வி மைய சார்பில் பயிற்சி பெற்று அரசு பணியில் பதவியேற்ற 9 பேருக்கு, காவல்துறையில் பணியேற்ற 7 பேருக்கு வெள்ளி குத்து விளக்கும், வெள்ளி பதக்கமும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பில் 430 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 12-ம் வகுப்பில் 530 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் என மொத்தம் 143 மாணவர்களுக்கு பாராட்டு சாற்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலூர் செயலாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.