காவல் நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்!
கே வி குப்பம் காவல் நிலையம் முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட போதை வாலிபால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் வேலூரில் இருந்து காட்பாடி, கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் செல்லும் தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு பயணிகளுடன் வந்து நின்றது. அதில் இருந்து ஒரு வாலிபரை கண்டக்டர் இறக்கிவிட்டு ஓடும் பஸ்சில், பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக்கூறி போலீசாரிடம் கூறிவிட்டு விட்டு சென்றுவிட்டார். போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் போதையில் இருப்பது தெரியவந்தது. அவர் தள்ளாடியபடி போலீசாரின் எச்சரிக்கையை மீறி, தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியை வழிமறித்து நின்றார்.மேலும் போலீசாரிடம் என்னை இறக்கிவிட்ட பஸ் திரும்பி இதே வழியில் வரும்போது அதை உடைப்பேன். என்னை பஸ்சில் சிலர் தாக்கினார்கள். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் விட்டுவிட்டீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து அங்கு கிடந்த குப்பையில் போய் உட்கார்ந்தார். அங்கு குப்பையில் கிடந்த மது பாட்டிலை எடுத்து உடைத்து, அவர் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதில் ரத்தம் சொட்டியபடி கீழே விழுந்தார். உடனடியாக, போலீசார் அவரைப்பிடித்து, முதல் உதவி சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்சில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலம் குறவர் குடிசை பகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 25) என்று தெரிய வந்தது.