தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று (ஜனவரி 10) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அப்பொழுது வழக்கறிஞர்கள் தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் விளையாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.