ராமநாதபுரம் பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவிகளுக்கு சுற்றுலாப் பயணம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2025-01-10 13:56 GMT
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவிகளுக்கு சுற்றுலாப் பயணம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்அவர்கள் மாணவிகளுக்கான அறிவியல் சுற்றுலா பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடத் திட்டம் படித்து வரும் மாணவிகள் ஆராய்ச்சி குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன்படி தேர்வு செய்யப்பட்ட 100 மாணவிகள் பங்கேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ISRO மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆராய்ச்சி குறித்து அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு வருவார்கள் 61601 செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் முகமது இர்பான், அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.தினேஷ்குமார் அவர்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News