ராசிபுரத்தில் (ஶ்ரீ ராம்) தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்தின் (RC) வாகன பதிவுச் சான்றிதழ் தராததால் தம்பதியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...

ராசிபுரத்தில் (ஶ்ரீ ராம்) தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்தின் (RC) வாகன பதிவுச் சான்றிதழ் தராததால் தம்பதியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...;

Update: 2026-02-05 16:49 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(44) இவரது மனைவி யோகேஸ்வரி(41) இருவரும் கூலி வேலை செய்துவரும் நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ராசிபுரம் டிவிஎஸ் ஷோரூம்யில் புதியதாக TVS ZEST என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.அதற்கு ஶ்ரீ ராம் நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று மாதம் தவணை முறையில் ரூ.4000 ரூபாய் பணம் செலுத்தி வந்தார்.கடந்த மாதத்துடன் வாகனத்தின் கடன் தொகை முடிந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் (RC) வாகன பதிவு சான்றிதழ் மற்றும் NOC உள்ளிட்டவைகள் கேட்டு நிதி நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.அங்கு பணியில் இருந்த நிறுவனத்தின் மேலாளர் RC BOOK தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், கடந்த 5 நாட்களாக நிதி நிறுவனத்திற்கு வந்து சென்று எந்த பயனும் அளிக்காததால் கணேசன் மற்றும் அவரது மாணவி லோகேஸ்வரி ஆகிய இருவரும் டிவிஎஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியாக பேருந்துகள் செல்ல முடியாமல் காத்திருந்தனர். பின்னர் ராசிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர். இதுகுறித்து இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் லோகேஸ்வரியின் கணவர் கணேசன் கூறுகையில், ஶ்ரீ ராம் நிதி நிறுவனத்தில் புதியதாக இருசக்கர வாகனம் வாங்கி அதன் தவணை தொகை முடிந்து,அதற்கான RC BOOK கேட்டு பலமுறை சென்றதாகவும் நிதி நிறுவனம் ஊழியர்கள் முறையாக பதிலளிக்காததால், மீண்டும் அந்த RC BOOK மீது,கூடுதலாக கடன் தொகையை கேட்டு விண்ணப்பித்திருந்தேன் அதற்கு ஊழியர்கள் தன்னிடம் படிவத்தில் கையொப்பம் பெற்று விட்டதாகும் கடந்த 5 நாட்களாகிய எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். மேலும் தனது இருசக்கர வாகனத்தின் RC BOOK நிதி நிறுவனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்...

Similar News