ராசிபுரத்தில் சௌடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் யாக வேள்விகள் நடத்தினர்..

ராசிபுரத்தில் சௌடேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் யாக வேள்விகள் நடத்தினர்..;

Update: 2026-02-05 16:30 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடக்க உள்ளது. ராசிபுரம் பகுதியில் தெலுங்கு தேவாங்கர் சமூக மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மற்றும் திருவிழா ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த விழாவிற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் ,23-ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் ,28-ம் தேதி முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. தற்போது கும்பாபிஷேக விழாவுக்கான முக்கிய நிகழ்ச்சிகள் வரும் பிப்ரவரி மாதம் ,5-ம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. அன்று காலை, 7:30 மணி அளவில் விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், புண்யாகவாசனம் மற்றும் கலச ஆவாஹனம் உள்ளிட்ட பூஜைகள் நடக்க உள்ளன. காலை, 10:30 மணி அளவில் தீர்த்தம் அழைத்தல் மற்றும் முளைப்பாரி ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து மாலை, 6:00 மணி அளவில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் திசா ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு, 8:30 மணி அளவில் கும்ப அலங்காரம் மற்றும் கலா கர்ஷணம் ஆகிய நிகழ்ச்சிகளும் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் ,6-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை, 5:30 மணி முதலே இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் தொடங்குகிறது. பின்னர் காலை, 8:30 மணி அளவில் மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து காலை, 8:45 மணி அளவில் கடம் புறப்பாடும், காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கும், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை, 11:00 மணி அளவில் சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பகல், 12:00 மணி அளவில் மகா தீபாராதனை நடக்கும். இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் ,7-ம் தேதி சனிக்கிழமை மாலை, 7:00 மணி அளவில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் நந்தவனத்தில் இருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அன்று இரவு, 10:30 மணி அளவில் அம்மன் வீதி உலா உற்சாகமாக நடக்கும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் பன்னீர்செல்வம், செட்டிமேட்டுக்காரர் குருசாமி மற்றும் தெலுங்கு தேவாங்கர் சமுதாய மக்கள், திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர். ' இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருளை பெற வேண்டும்' என்று கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Similar News