மக்களை வாட்டும் விடியா ஆட்சி: ‘உங்கள் வீட்டு பில்லே சாட்சி’–நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் முன்னிலையில் அதிமுகவினர் தீவிர தெருமுனை பிரச்சாரம்!

தெருமுனை பிரச்சாரத்தின் போது அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து அடிப்படை குறைகள் கேட்டறியப்பட்டு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும் என முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் உறுதியளித்தார்.;

Update: 2026-02-05 15:45 GMT
நாமக்கல் மாநகர அதிமுக சார்பில், ‘விடியா ஆட்சி உங்க வீட்டு பில்லே (Bill) சாட்சி’ என்ற தலைப்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத் தெரு, மாரிகாங்காணி, பேட்டை சுண்ணாம்புக்கார தெரு மற்றும் நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சார பயணம் நடைபெற்றது.இந்த பிரச்சாரத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் மாநகர செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Advertisement
பிரச்சாரத்தின் போது, விடியா திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் விலைவாசி உயர்வு, மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தையும் தற்போதைய விடியா திமுக ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் மற்றும் இழப்புகளை விளக்கும் வகையில், “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்லே சாட்சி” என்ற தலைப்பில், ஏஐஏடிஎம்கே கனெக்ட் செயலி மூலம் கணக்கிடப்பட்ட ‘பனிஷ்மென்ட் பில்’ விவரங்கள் கையடக்க பிரிண்டர்களின் உதவியுடன் வீடுதோறும் அச்சிட்டு வழங்கப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அதிமுகமுகவின் தேர்தல் -2026 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.முன்னதாக,அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து அடிப்படை குறைகள் கேட்டறியப்பட்டு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும் என முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் உறுதியளித்தார்.இந்த நிகழ்வில், வார்டு செயலாளர்கள் ராம் (எ)ஜெயராமச்சந்திரன், ரவி, சின்னுசாமி, கோவிந்தசாமி, இராவணன் உள்ளிட்டோர், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News