நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் வீடுகள்தோறும் நீர், அம்ருத் 2.0, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் வீடுகள்தோறும் நீர், அம்ருத் 2.0, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ரூ. 854.37 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது..;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த கோனேரிபட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா மூர்த்தி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு குடிநீர் தண்ட பணிகளை குத்துவிளக்கு ஏற்றி அர்ப்பணித்து வைத்தனர். இதேபோல, 284.04 கோடி மதிப்பீட்டில் மல்லசமுத்திரம் எலச்சிபாளையம் பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளில் 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 523 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ. 854 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டக்கூடிய திட்டமானது பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளது என்றார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றி பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார், 854 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது வரலாற்று சாதனையாகும். தமிழக முதல்வர் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை குடியிருத்தங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தை குடிநீர் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, ராசிபுரம் நகர் மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர், நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், அட்மா குழு தலைவர்கள் கே.பி. ஜெகநாதன் ஆர்.எம். துரைசாமி,குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.