திருச்செங்கோடு நகராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள மூன்று சாலைகளுக்கான பூமி பூஜை

திருச்செங்கோடு நகராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள மூன்று சாலைகளுக்கான பூமி பூஜை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுதொடங்கி வைத்தார்;

Update: 2026-02-05 14:52 GMT
திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதிகளிலும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 கோடியே 47 லட்சம் மதிப்பில் பல்வேறு சாலைகள் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 3ம் கட்டமாக 12வது வார்டு ஏகே இ தெருவில் 270 மீட்டர் நீளமுள்ள தார் சாலை அமைக்கும் பணி,11 வது வார்டு காமெடி சந்து பகுதியில் இருநூற்று நாப்பது மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் சாலைபதினோராவது வார்டு பழைய சேலம் ரோட்டில்220 மீட்டர் காங்கிரீட் சாலைபுதுப்பித்தல் ஆகியவை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது. திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.முன்னாள் நகர் மன்ற தலைவர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நடேசன் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,திருச்செங்கோடு கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் பகுதி நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன்,அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் அர்த்தநாரி,உதவி பொறியாளர் சத்திய நாகராணி அனுப்பிரியா மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பகுதி பிரமுகர்கள் பொதுமக்கள்என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News