காணொளி காட்சி வாயிலாக இராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை தொடங்கி வைத்து சிறப்பித்த முதலமிச்சர் மு.க ஸ்டாலின்.

இராசிபுரம் வட்டத்தில் ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் 523 ஊரக குடியிருப்புகளும், பரமத்தி வட்டத்தில் ரூ.284.04 கோடி மதிப்பீட்டில் 547 ஊரக குடியிருப்புகளும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தகவல்.;

Update: 2026-02-05 13:49 GMT

 தமிழ்நாடு முதலமைச்சர்   காணொலி காட்சி வாயிலாக, ரூ.854.37 கோடி மதிப்பீட்டில் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் (ம) 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ரூ.284.04 கோடி மதிப்பீட்டில் மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் (ம) பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கோனோரிபட்டியில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்   கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்   மாவட்ட  ஆட்சியர் தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் .வி.எஸ்.மாதேஸ்வரன்   நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் .பெ.ராமலிங்கம்  ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டார்.பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர்  கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்  தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர்   தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், அம்ரூத் 2.0 திட்டம் – குடிநீர் அபிவிருத்திப் பணிகள் மற்றும் 2.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தானியங்கி அதிநவீன பால்பதன ஆலை ஆகியவற்றினை பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார்கள்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புக்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகளான நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீரப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளநல்லூர், வெண்ணந்தூர், அத்தனூர், மல்லசத்திரம் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்களான இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புக்களுக்கான கூட்டு குடிநீர் திட்டமானது ஜல்ஜீவன் மிஷன் மற்றும் அம்ரூத் 2.0 நிதி ஆதாரங்களின் கீழ் ரூ.854.37 கோடிக்கு 14.03.2022-ல் அரசாணை வழங்கப்பட்டது.   நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் 04.09.2023 அன்று இத்திட்டம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் அளவு குடிநீரும் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு 55 லிட்டர் அளவு குடிநீரும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2052 ஆண்டு வரை மக்கள் பயன்பெறும் வகையில் 86.04 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையில் நெடுங்குளம் காட்டூர் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து இயல்பு நீர் எடுக்கப்பட்டு கரட்டுப்புதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சுத்திகரிக்கபடுகிறது. இத்திட்டத்தில் சுமார் 1325 கிலோ லிட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 13 எண்ணம் நீர் உந்து நிலையங்களுக்கு சென்றடைக்கிறது. பின்னர் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள 74 எண்ணம் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் மற்றும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 88 எண்ணம் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் ஆக மொத்தம் 162 எண்ணம் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு சுத்தநீர் ஏற்றப்படுகிறது நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊரட்சிகளில் உள்ள 963 எண்ணம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும், புதிதாக கட்டப்பட்ட 86 எண்ணம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கும் என மொத்தம் 1049 எண்ணம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு காவிரிக் குடிநீர் வழங்கப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பெரு திட்டத்தின் மூலம் இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சுமார் 6 இலட்சம் மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் பயன்பெறுவார்கள்.அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் மல்லமுத்திரம், எலச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டமும் இன்றைய தினம் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் 28.01.2023 அன்று இத்திட்டம் அடிக்கடி நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் சுமார் 30 ஆண்டு காலத்திற்கு பயன்பெறும் வகையிலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீரும், அடிப்படை ஆண்டு 2022 ன் படி 1,82,303 மக்கள் பயன் பெறும் வகையில் 14.41 மில்லியன் லிட்டர் குடிநீரும், இடைநிலை ஆண்டு 2037 ன் படி 2,15,114 மக்கள் பயன் பெறும் வகையில் 16.39 மில்லியன் லிட்டர் குடிநீரும், உச்சநிலை ஆண்டு 2052 ன் படி 2,40,651 மக்கள் பயன் பெறும் வகையில் 17.96 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மொத்த குடிநீர் ஒதுக்கீட்டிலிருந்து எடுப்பு முனை மங்களம் மற்றும் காளிப்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் நீர் எடுக்கப்பட்டு 9 எண்ணம் நீரேற்று நிலையங்களுக்கு சுமார் 65 கி.மீ நீளம் உள்ள பிரதான குழாய்கள் மூலம் நீர் ஏற்பட்டு, சுமார் 215 கி.மீ நீளம் உள்ள நீரேற்று குழாய்கள் மூலமாக மல்லமுத்திரம், எலாச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 74 எண்ணம் ஊராட்சி தரைமட்ட நீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது.ஊராட்சிகளில் உள்ள 74 தரைரமட்ட நீர் தேக்க தொட்டிகளிலிருந்து சுமார் 633 கி.மீ நீளம் உள்ள நீரேற்று குழாய்கள் மூலம் 547 குடியிருப்புகளில் உள்ள 843 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பகிர்மானகுழாய்கள் மூலம் வீடுதோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பெற்ற பிறகு குடிநீர் திட்டங்களில் இராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தான் முதலில் கையெழுத்திட்டார். இதன் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் தடையின்றி வழங்கப்படும். இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தினை செயல்படுத்திட இரவு, பகல் பாராது உழைத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததார்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், விடியல் பயண திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் தூய்மை பணியாளர்களின் ஊதியம் ரூ.5000/-ல் இருந்து ரூ.6000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 7,000 நபர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 5 இலட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயித்தார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 40,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இல்லம் தேடி ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாளைய தினம் நபார்டு திட்டத்தின் கீழ் புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.90 கி.மீ நீளத்திற்கு போதமலையில் சாலையினை பயன்பாட்டிற்கு வழங்கவுள்ளார்கள் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் .கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.ராமசாமி, இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், அட்மா குழு தலைவர்கள் கே.பி.ஜெகநாதன் (இராசிபுரம்), ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்),  ஆர்.ரவீந்திரன் (நாமகிரிபேட்டை), மாவட்ட வருவாய் அலுவலர்  மா.க.சரவணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் (கூ.பொ), கோவை  தி.வெங்கடேஷ், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)  சு.வடிவேல், நிர்வாகப்பொறியாளர்கள் திரு.ந.ராமமூர்த்தி (கிராம குடிநீர் திட்ட கோட்டம், நாமக்கல்),  சி.வரதராஜீ (பாதாள சாக்கடை திட்ட கோட்டம், இராசிபுரம்),   பெ.சுமதி (திட்ட கோட்டம், நாமக்கல்) உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News