வாணியாறு அணையில் சமத்துவ பொங்கல் விழா
பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணி யாரு அணையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் நேற்று ஜனவரி 09 மாலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண், பொதுப்பணித்துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என சந்தோசத்தை கரகோஷத்துடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உரியடி, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி பரிசு பொருட்களை வழங்கினார். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.