சுரண்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவா் கைது
அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீ.கே.புதூா் வட்டம் சுரண்டையில் இருந்து பூபாண்டியாபுரம் செல்லும் வழியில் டைல்ஸ் தயாரிக்கும் கிடங்கில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக சுரண்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அருந்த சிவகுருநாதபுரத்தைச் சாா்ந்த சுடலை மாடன் மகன் முருகன் (52)என்பவரை கைது செய்த போலீஸாா், கிடங்கில் குவிக்கப்பட்டிருந்த பட்டாசுக்கான மூலப்பொருள்களை பறிமுதல் செய்தனா். அங்கு, வீ.கே.புதூா் வட்டாட்சியரும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினாா்.