ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் வழியில் புதுப்பட்டி விளக்கு பகுதியில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கர்ப்பிணி பெண் புள்ளிமான் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.இது குறித்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான புள்ளி மானை மீட்டு விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.