![வெள்ளிசந்தையில் தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி வெள்ளிசந்தையில் தமிழ்நாடு அரசின் புகைப்படக்கண்காட்சி](https://king24x7.com/h-upload/2025/01/27/784541-136259_1737987670937_1737988297963_1737988351992_1737988443653_1737988636772_1737988654600_1737988706417_1737988740887_1737988890455_1737989850670_1737990141088_1737990141187_1737990141603_1737990148819_1737990156877_1737990166959_1737990168984_1737990184472_1737990187149_1737990250147_1737990360161_1737990614468_1737990702428_1737990737399_1737991012111_1737991686172_1737991713499_1737991719145_1737994645999_1737994929272_1738036227147_1738183381527_1738199500475.webp)
குமரி மாவட்டம் வெள்ளிசந்தை ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், சாலை, பேருந்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டங்கள், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றார்கள்.