ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் வேண்டாம் என கோரிக்கை மனு..
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் வேண்டாம் என கோரிக்கை மனு..;
![ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் வேண்டாம் என கோரிக்கை மனு.. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் இடமாற்றம் வேண்டாம் என கோரிக்கை மனு..](https://king24x7.com/h-upload/2025/01/27/784615-1002225503_1737991948648_1737995526294_1738024833505_1738027609478_1738027742630_1738028325965_1738031480251_1738032454026_1738032747555_1738036359934_1738036572778_1738037159935_1738037161617_1738039530161_1738039577246_1738039621695_1738039684268_1738039786355_1738039887158_1738039889725_1738039955860_1738039992962_1738040135413_1738041188395_1738049920837_1738067106914_1738067580873_1738170828415_1738187279781_1738499567019_1738778791352.webp)
நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னம்மா அணியை சேர்ந்த நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என்.கோபால் கட்டனாச்சம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி குடியரசு தலைவர், தமிழக முதல்வர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஏற்கனவே அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் ஏற்கனவே நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது, பொதுமக்களின் வசதிக்கேற்ப இந்த பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தை சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அணைப்பாளையம் கிராமத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதை கைவிடுமாறு கட்டணச்சம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை கட்டனாச்சம்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிகை விஜயகுமார் அதிகாரியிடத்தில் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால், முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கோரிக்கை மனுவை வழங்கினர்.