டால்மியா சிமென்ட் ஆலை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் தெளிப்பான்கள், தார்பாய்கள் வழங்கல்
டால்மியா சிமென்ட் ஆலை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் தெளிப்பான்கள், தார்பாய்கள் வழங்கப்பட்டது.;
அரியலூர், பிப். 19- அரியலூர் அடுத்த தாமரைக்குளத்தில் இயங்கி வரும் டால்மியா சிமென்ட் ஆலையின் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில், முதற்கட்டமாக 60 விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் பேட்டரி தெளிப்பான்கள், தார்பாய்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த அந்த ஆலையின் தலைவர் பிரியாரஞ்சன், முதற்கட்டமாக 60 விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் மேற்கண்ட பொருள்களை வழங்கி, வரும் நாள்களில் விவசாயிகளுக்கு ரூ.5.5 மதிப்பில் தார்பாய்கள், ரூ.8 லட்சம் மதிப்பில் பேட்டரி தெளிப்பான்கள் வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், ஆலையின் மனிதவள துறை பொது மேலாளர் சதிஷ்குமார், வெளியுறவு துறை பொது மேலாளர் பாலசுப்ரமணியன், சமுக பொறுப்புணர்வுத் துறை மேலாளர் பிரபாகரன், தாமரைக்குளம் ஊராட்சி முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் பிரேம்குமார், சுந்தரி துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :