ராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவேந்தல்..
ராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவேந்தல்..;
சமூக நீதிப் போராளி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52 வது நினைவேந்தல் நிகழ்வு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தி.வி.க நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா, தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வீரவணக்கம் கோஷங்களும் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர், அவர்கள் கலந்து சிறப்பித்தார். தி.வி.க. பொறுப்பாளர் மல்லசமுத்திரம் பெரியண்ணன், வரவேற்புரை ஆற்றினார். மேலும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் ஆனந்த், மற்றும் ரவிச்சந்திரன், கந்தசாமி, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஸ்ரீ ராமுலு முரளி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராசிபுரம் & சேந்தை தொகுதி மண்டல துணைச் செயலாளர் அரசன், நகர் மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் நடராஜன், நகரப் பொறுப்பாளர் சுகுவளவன், தொகுதி அமைப்பாளர் கண்ணன், பிள்ளாநல்லூர் பேரூர் செயலாளர் அரவிந்தன், கலை இலக்கியப் பேரவை ஆதித்தமிழன், கனகராஜ் மற்றும் வி. நகர் மகேந்திரன், ஆகியோரும் தி.வி.க. நகர அமைப்பாளர் மற்றும் சுமதி மதிவதனி , ஆதித் தமிழர் பேரவை கட்சியை சார்ந்த மாவட்டத் தலைவர் பெருமாள்,ராசை ஒன்றிய செயலாளர் முருகேசன் மா.செயலாளர் தொ. அணி, ஆகியோரும் முருகேசன், ஆதித் தமிழர் கட்சியை சார்ந்த இராவண கோபி, மாவட்டச் செயலாளர் தங்கதுரை, மா. து. செயலாளர் பிரசாந்த், இராசை ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், நா. பேட்டை ஒன்றிய செயலாளர் ஆகியோரும்தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த தனுஷ்,நகரச் செயலாளர் செல்வேந்திரன், ராஜா,ஆகியோரும் மற்றும் வி. நகர் ராஜ்குமார், திமுக உள்பட பலரும் கலந்து கொண்டனர். இராமச்சந்திரன், தி.வி.க வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் நன்றியுரையாற்றினார்.