அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்

புதுக்கோட்டை அருகே வல்லத்திராக் கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கிவைத்தார்;

Update: 2026-02-07 23:40 GMT
புதுக்கோட்டை அருகே வல்லத்திராக் கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்து மருத்துவ நோயாளிகளை நோயாளிகள் என்று அழைக்காமல் மருத்துவ பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார் இது போல் மருத்துவ துறையில் எண்ணற்ற நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்று சிறப்புரை ஆற்றி னார் அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகம் முழுவதும் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை இசிஜி எக்கோ உள்ளிட்ட மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்த பார்வையிட்டார் அதன் பிறகு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ உபகரணம் கொண்ட தொகுப்பினை வழங்கினார் இந்நிகழ்வில் அறந்தாங்கி பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர் கே பி கே தங்கமணி மற்றும் வடிவேலு ராஜ பெரியண்ணன் விஜராஜரெத்தினம் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Similar News