வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா...
வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா...;
இராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அன்று ஆண்டு விருதுகள் வழங்கும் விழா மற்றும் விளையாட்டு பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பள்ளியில் CCA (இணைக்கலைத் திட்ட செயல்பாடுகள்) போட்டிகள், வெளிப்புற போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் முதல் மூன்று இடம் பிடித்த சுமார் 500 மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கி ஊக்குவிக்க பட்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைளின் வெற்றியில் பெருமிதம் கொண்டனர். குறிப்பாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் Open National முறையே தங்கப் பதக்கம் மற்றும் G.M. கவிராகவன், G.M. கவிராகவி வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாவட்ட மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் நிர்வாகக்குழு பரிசு பெற்ற அனைவரையும் பாராட்டி ஊக்குவித்தனர். பள்ளியின் தலைவர் P. நடராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினர். பள்ளியின் செயலாளர் R. பாலசுப்ரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், பெற்றோர்கள், மற்றும் மாணவ மாணவிகள் முதல்வர், ஆசிரியர்கள். என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..