தனியார் கல்லூரியில் கனடா தொழிலதிபர் வருகை தமிழ்க் கலாச்சாரம் குறித்து புகழாரம்,

குமாரபாளையம் தனியார் கல்லூரியில் கனடா தொழிலதிபர் வருகை தந்து கனடாவில் தமிழ் மொழி, கலாச்சார வளர்ச்சி குறித்து பேசினார்;

Update: 2026-02-07 16:20 GMT
குமாரபாளையம் தனியார் கல்லூரியில் கனடா தொழிலதிபர் வருகை தந்து கனடாவில் தமிழ் மொழி, கலாச்சார வளர்ச்சி குறித்து பேசினார். \கனடா தொழிலதிபர் சிவானந்தன் கூறியதாவது: எனது தந்தை உலக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார். 1971ல் ஆங்கிலேய அதிகாரி உதவியினால் 23 நாடுகள், 57 பெரிய நகரங்களுக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றேன். கனடாவில் எனக்கு கிடைத்த தொழில் அனுபவங்களால், சொந்தமாக தொழில் செய்ய முன்வந்தேன். சேவைப்பணியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி செய்து வழங்கி வந்தேன். கனடாவில் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகம் உண்டு. தமிழ் மரபு வழி கலாச்சாரங்களுக்கு மிக பெரிய வரவேற்பு உண்டு. இங்குள்ள குழந்தைகளுக்கு சங்கீதம், பரதநாட்டியம் உள்ளிட்ட உன்னத கலைகளை ஆர்வத்துடன் கற்று தருகிறார்கள். தமிழனாக இது எங்களுக்கு பெருமை. சேர்க்கிறது. நடிகர் சிவாஜிகணேசன் அதிகம் படிக்கவில்லை என்றாலும், தான் பேசிய வசனங்களால் தமிழ் வளர்த்தார். சென்னையில் வைத்துள்ள திருவள்ளுவர் சிலை, சிவாஜியின் திருவுருவம் கொண்டதாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழி வளர்க்க ஆர்வமுடன் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Similar News