வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் புதியகம் - மாணவர் - வணிக விற்பனை மற்றும் ஓவிய கண்காட்சி
வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் புதியகம் - மாணவர் - வணிக விற்பனை மற்றும் ஓவிய கண்காட்சி;
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இயங்கி வரும், வெற்றி விகாஸ் பப்ளிக் பள்ளியில் "கல்வி என்பது ஏட்டு படிப்பாக இல்லாமல் அனுபவ உணர்வாக இருக்கவேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துவதை மெய்ப்பிக்கும் வகையில் மாணவர்கள் வணிக அறிவை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் "புதியகம்-II" எனும் பெயரிடப்பட்ட வணிக மற்றும் ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்நிகழ்விற்கென பள்ளிவளாகத்தில் சிறப்பான வணிகக் கண்காட்சி, விற்பனை மற்றும் ஓவிய கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. "புதியகம்-II" வணிக மற்றும் ஓவிய அரங்கங்களை வெற்றிவிகாஸ் பப்ளிக் பள்ளியின் பள்ளியின் செயலாளர் முனைவர். திரு.G. வெற்றிச்செல்வன் அவர்களும், தாளாளர் முனைவர் திருமதி. S. ரோஷ்ணி வெற்றிச்செல்வன் அவர்களும் திறந்துவைத்து, விற்பனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த "160 "க்கும் மேற்பட்ட அரங்குகளையும், மாணவர்களின் பல்வேறு விதமான கலை நுட்பத்துடனான ஓவியங்களையும் பார்வையிட்டு, அவைகுறித்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி விற்பனை மற்றும் ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தனர். 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுவர், சிறுமிகளுக்கு சிறுவர் சந்தையும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வணிக விற்பனை கண்காட்சி மற்றும் ஓவிய கண்காட்சி ஆகியன அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு கிராமத்து திருவிழாவிற்குள் நுழைந்து ரசித்த உணர்வை மாணவ, மாணவிகள் வெகு அழகாக ஏற்படுத்தி யிருந்தனர். பாரம்பரிய உணவு முதல் நவீன உணவுகளென அவர்களே சொந்தமாக தயாரித்து விற்பனைசெய்தவிதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. வணிகத்தின் நுட்பங்களை மாணவர்கள் அறிவதன் வாயிலாக, தங்களின் அன்றாடப் பயன்பாட்டிற்க்கான பொருட்களின் மதிப்புகளை அறியும் வாய்ப்பு உருவாகியது. மேலும் பொருட்களின் உற்பத்திவிலை, அடக்கவிலை விற்பனை விலை ஆகியவற்றை கணக்கிடுதல், சந்தை வாய்ப்புகள், விற்பனை நுட்பங்கள், வாடிக்கையாளர்களை வணிகத்திற்கு ஈர்ப்பது மற்றும் லாபத்தினை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து முறையான பயிற்சிகள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர்.. வணிக நிகழ்வில் பங்கேற்க மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இதனடிப்படையில் பங்கேற்ற பெற்றோர்கள் பள்ளியின் இந்த முயற்சிக்கு தங்களின் நன்றிகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். "புதியகம் -II" வணிக கண்காட்சிக்கு வெற்றிவிகாஸ் பப்ளிக் பள்ளியின் தலைவர் முனைவர் திரு. S. குணசேகரன் அவர்களும், இணைச்செயலாளர் திருமதி. G. மல்லிகா அவர்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர். திருமதி. சுதா ரமேஷ் அவர்களின் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களும்,பணியாளர்களும் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்...