வளையப்பட்டியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி...அதிமுக–பாஜக–தவெக–கம்யூனிஸ்ட்–விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்;

Update: 2026-02-07 16:21 GMT
வளையப்பட்டி அருகே தமிழ்நாடு அரசு அமைக்க உள்ள சிப்காட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, வளையப்பட்டியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு அதிமுக, பாஜக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சியினர், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சேந்தமங்கலம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சரவணன், தவெக மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக், கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ் தேசிய கட்சி நிர்வாகிகள், விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், சிப்காட் எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் இரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
அவர்கள் பேசுகையில், வளையப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் வகையில் சிப்காட் திட்டம் அமைக்கப்படுவதாகவும், விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “விவசாய நிலங்களை காக்க வேண்டும்”, “சிப்காட் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்”என முழக்கங்களை எழுப்பினர்.மேலும், சிப்காட் திட்டத்தை அரசு ரத்து செய்யாவிட்டால், மாவட்டம் முழுவதும் பெரிய அளவிலான தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News